ஐஸ்லாந்தில் வெடித்த எரிமலை: தீக்கிரையான வீடுகள்...!


ஐரோப்பாவில் அமைந்துள்ள தீவு நாடு ஐஸ்லாந்து ஆகும்.

ரெய்க்யவிக்,

ஐரோப்பாவில் அமைந்துள்ள தீவு நாடு ஐஸ்லாந்து. இந்நாட்டில் பல்வேறு எரிமலைகள் உள்ளன. இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு தீபகற்பம் கிராண்டாவிக் பகுதியில் உள்ள எரிமலை திடீரென வெடித்து சிதறியது.

இதன் காரணமாக எரிமலையில் இருந்து லாவா குழம்பு வெளியேறியது. அது அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அதேவேளை, லாவா குழம்பு குடியிருப்பு பகுதிக்குள் சென்றதால் அங்கிருந்த வீடுகள், கடைகள் உள்பட பல்வேறு கட்டிடங்கள் அனைத்தும் தீக்கிரையாகின.


Next Story