சர்வதேச நிதியத்தின் இயக்குனராக இந்தியர் நியமனம்..!


சர்வதேச நிதியத்தின் இயக்குனராக இந்தியர் நியமனம்..!
x

image courtesy: AFP

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் துறையின் இயக்குனராக கிருஷ்ணா சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வாஷிங்டன்,

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்.) ஆசிய-பசிபிக் துறையின் இயக்குனராக இருந்த சான்கியாங் ரீ, கடந்த மார்ச் 23-ந் தேதி ஓய்வு பெற்றார். அதைத்தொடர்ந்து அப்பதவி காலியாக இருந்தது.

இந்த நிலையில், தற்போது துணை இயக்குனராக உள்ள கிருஷ்ணா சீனிவாசன், இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 22-ந் தேதி பொறுப்பேற்றுக் கொள்கிறார். அதை ஐ.எம்.எப். நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜியவா நேற்று அறிவித்தார்.

கிருஷ்ணா சீனிவாசன், இந்திய பொருளாதார நிபுணர் ஆவார். டெல்லியில், பொருளாதாரத்தில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளை முடித்தார். சர்வதேச நிதியத்தில் 27 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.

அதற்கு முன்பு, இண்டியானா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகவும், உலக வங்கி ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

1 More update

Next Story