ஐ.எம்.எப்.- ன் ஒப்பந்தத்தை இம்ரான்கான் கட்சி நாசப்படுத்த முயற்சிக்கிறது - பாக். பிரதமர் குற்றச்சாட்டு


ஐ.எம்.எப்.- ன் ஒப்பந்தத்தை இம்ரான்கான் கட்சி நாசப்படுத்த முயற்சிக்கிறது - பாக். பிரதமர் குற்றச்சாட்டு
x

இம்ரான்கானின் கட்சி சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை நாசப்படுத்த முயற்சி செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம் சுமத்தி உள்ளார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் விதமாக அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) அந்நாடு 170 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் நிதியுதவி கோரியுள்ளது. பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் நாளை ஆலோசனை நடத்துகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் கட்சி சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்.) ஒப்பந்தத்தை நாசப்படுத்த முயலுவதாக அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம் சுமத்தி உள்ளார்.

சிந்து மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஷெபாஸ் ஷெரீப் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர் , "இதுபோன்ற சுயநல அரசியலை நான் பார்த்ததில்லை. இது பாகிஸ்தானுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி மற்றும் நாட்டிற்கு எதிரான ஒரு பெரிய சதி" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story