உக்ரைனில் உள்ள இந்தியர்கள் சீக்கிரம் வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

உக்ரைனுக்கு இந்தியர்கள் வரவேண்டாம் எனவும் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் சீக்கிரம் வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
கீவ்,
கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்கும் பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்புக்கு உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டிய ரஷியா உக்ரைன் மீதான தாக்குதல்களை உக்கரமாக்கி உள்ளது. அந்த வகையில் போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை இல்லாத அளவுக்கு உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா பயங்கரமான தாக்குதலை தொடர்ந்து வருகிறது. போர் தொடர்ந்து வருவதால் சேதங்களை சீர் செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது.
இந்தநிலையில்,உக்ரைனில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதால் அதனை கருத்தில் கொண்டு, இந்திய குடிமக்கள் உக்ரைனுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். உக்ரைனில் உள்ள மாணவர்கள் உட்பட இந்திய குடிமக்கள் விரைவில் உக்ரைனை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள் என இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
Related Tags :
Next Story