ரஷியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலம்!


ரஷியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலம்!
x

இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

மாஸ்கோ,

இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவையொட்டி, கடந்த ஓராண்டாக அம்ரித் மகோத்சவ் என்ற பெயரிலான இந்திய சுதந்திர அமுதப்பெருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு, தேசியக்கொடி வண்ணத்திலான தலைப்பாகை அணிந்து வந்திருந்த பிரதமர் மோடி, டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி, வணக்கம் செலுத்தி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இந்நிலையில், ரஷியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தேசியக்கொடி ஏற்றி இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

ரஷியாவுக்கான இந்திய தூதர் பவன் கபூர் அங்குள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டு ஜனாதிபதியின் செய்தியை அவர் வாசித்தார்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.


Next Story