இந்தியாவுக்கு புகழாரம் சூட்டி ரஷிய அதிபர் புதின் சுதந்திர தின வாழ்த்து!


இந்தியாவுக்கு புகழாரம் சூட்டி ரஷிய அதிபர் புதின் சுதந்திர தின வாழ்த்து!
x

இந்தியாவின் அனைத்து குடிமக்களும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பெற்று வாழ வாழ்த்து தெரிவித்தார்.

மாஸ்கோ,

இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தலைமைக்கும் அதன் மக்களுக்கும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகில் இந்தியாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறிய வாழ்த்துச் செய்தியில், "இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அன்பான வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

சுதந்திரமான வளர்ச்சியின் பல ஆண்டுகளில், உங்கள் நாடு உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட வெற்றியை பொருளாதார, சமூக, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் பிற துறைகளில் அடைந்துள்ளது.

உலக அரங்கில் இந்தியா கணிசமான மதிப்பைப் பெறுகிறது. சர்வதேச நிகழ்ச்சி நிரலில் உள்ள அழுத்தமான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இந்தியா முக்கிய ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்கிறது.

மாஸ்கோவும் புதுடெல்லியும் பல்வேறு பகுதிகளில் வெற்றிகரமாக ஒத்துழைக்கின்றன.நமது நட்பான மக்களுக்காக இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பிராந்திய மற்றும் உலக அளவில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தவும் கூட்டு முயற்சிகளின் மூலம், வளர்ச்சியை உறுதி செய்வோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்." இவ்வாறு அவர் வாழ்த்தியுள்ளார்.

மேலும், ஜனாதிபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியை விரும்புவதாக அதிபர் புதின் மனதார வாழ்த்தினார், மேலும் இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பெற்று வாழ வாழ்த்து தெரிவித்தார்.


Next Story