இந்தியா-செனகல் இடையே 1.65 பில்லியன் டாலர்கள் வர்த்தகம் - துணை ஜனாதிபதி


இந்தியா-செனகல் இடையே 1.65 பில்லியன் டாலர்கள் வர்த்தகம் - துணை ஜனாதிபதி
x

கொரோனா காலத்திலும் இந்தியா-செனகல் இடையே 1.65 பில்லியன் டாலர்களை தாண்டி வா்த்தகம் நடைபெற்று உள்ளது என வெங்கையா நாயுடு தொிவித்துள்ளாா்.

டாகர்,

இந்தியா-செனகல் நாடுகளுக்கு இடையேயான துதரக ரீதியிலான உறவு ஏற்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, செனகல் சென்றார். இந்தியா-செனகல் வணிக நிகழ்வில் அவர் உரையாற்றினாா்.

இதில் பேசியதாவது:- கொரோனா பாதிக்கப்பட்ட நிலையிலும், கடந்த 2021-22-ம் ஆண்டில் இந்தியா- செனகல் நாட்டிற்கு இடையே பொருளாதார மற்றும் வா்த்தக உறவுகளில் வரவேற்க்க தக்க வளா்ச்சி உள்ளது.

கொரோனா காலத்திலும் சுமாா் 1.65 பில்லியன் டாலா்கள் வா்த்தகம் நடந்துள்ளது. வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை கணிசமான வளரும் என நம்பிக்கை தொிவித்தாா்.

இந்தியாவில் இருந்து ஜவுளி, உணவுப் பொருட்கள், ஆட்டோமொபைல்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் செனகலுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பாஸ்பாரிக் அமிலம் மற்றும் முந்திரியின் மூலப்பொருட்கள் செனகலில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது சுற்றுப்பயணத்தின் கடைசி கட்டமாக வருகிற ஜூன் 4 முதல் ஜூன் 7 வரை கத்தார் நாட்டிற்கு செல்ல உள்ளாா்

1 More update

Next Story