அமெரிக்க காங்கிரசில் இந்துக் குழுவை உருவாக்க முயற்சி- இந்திய-அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்


அமெரிக்க காங்கிரசில் இந்துக் குழுவை உருவாக்க முயற்சி-  இந்திய-அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்
x

அமெரிக்க காங்கிரசில் இந்துக் குழுவை உருவாக்க முயற்சிப்பதாக இந்திய-அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஸ்ரீ தானேதர் கூறி உள்ளார்.

வாஷிங்டன்

அமெரிக்க அரசியலில் ஆதாயம் தேடும் நோக்கில் 20 வெவ்வேறு அமைப்புகளின் ஆதரவுடன் இந்துக்களுக்காக அமெரிக்கர்கள் ஏற்பாடு செய்திருந்த முதல் இந்து கூட்டம் கேபிடல் ஹில்லில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய இந்திய-அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஸ்ரீ தானேதர் கூறியதாவது:-

அமெரிக்க காங்கிரஸ் என்பது அமெரிக்காவின் கூட்டாட்சி அரசாங்கத்தின் சட்டமன்றமாகும்

நாட்டில் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு அவர்களை பலிகடா ஆக்காமல் இருப்பதை உறுதிசெய்ய ஒத்த எண்ணம் கொண்ட உறுப்பினர்கள் ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்படுவார்கள்.

இந்து மதத்தின் மீதான வெறுப்பை அமெரிக்கா அகற்றும். இந்து மதம் மற்றும் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் மீது மதவெறி மற்றும் பாகுபாடு இல்லாததை உறுதி செய்யும்.

ஒவ்வொரு நபருக்கும் ஒரு மதத்தைத் தேர்ந்தெடுக்கவும் துன்புறுத்தல் இல்லாமல், பாகுபாடு இல்லாமல், வெறுப்பு இல்லாமல் தனது கடவுளிடம் பிரார்த்தனை செய்ய உரிமை உண்டு என கூறினார்.

தானேதர் மிச்சிகனின் 13வது மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவின் பல்வேறு இந்து குழுக்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அமெரிக்கன் பார் இந்துஸ் அமைப்பின் தலைவரும் நிறுவனருமான டாக்டர். ரொமேஷ் ஜாப்ரா கூறியதாவது:-

அரசியலை நோக்கமாகக் கொண்டு இதுபோன்ற நிகழ்ச்சி அமெரிக்காவில் நடத்தப்படுவது இதுவே முதல்முறை. அமெரிக்காவில் இந்துக்கள் பல பாகுபாடுகளை எதிர்கொள்வதாகவும், அதனால்தான் பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


Next Story