சிங்கப்பூரில் காதலியை தாக்கிய இந்தியருக்கு சிறைதண்டனை


சிங்கப்பூரில் காதலியை தாக்கிய இந்தியருக்கு சிறைதண்டனை
x

கோப்புப்படம்

சிங்கப்பூரில் தனது காதலியை தாக்கிய இந்தியருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியான விக்னேஷ்வரன் (வயது 42) தனது காதலி லட்சுமியுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார். இவர்கள் தங்களது வீட்டில் நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தனர். இதனை கவனிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் விக்னேஷ்வரன் தனது காதலி மீது பறவைக்கூண்டை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து லட்சுமி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் விக்னேஷ்வரன் மீதான குற்றச்சாட்டு தற்போது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது.


Next Story