தென்கிழக்கு ஆசியாவின் அதிவேக ரெயில் சேவையை தொடங்கிய இந்தோனேசியா


தென்கிழக்கு ஆசியாவின் அதிவேக ரெயில் சேவையை தொடங்கிய இந்தோனேசியா
x

தென்கிழக்கு ஆசியாவின் அதிவேக ரெயில் சேவையை இந்தோனேசியா தொடங்கியுள்ளது.

ஜகார்த்தா,

தென்கிழக்கு ஆசியாவின் முதல் அதிவேக ரெயில் சேவையை இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ தொடங்கி வைத்தார். தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பாண்டுங் இடையே செல்லும் இந்த ரெயில் மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளது. இதன்மூலம் தற்போதைய 3 மணி நேர பயண நேரம் 40 நிமிடங்களாக குறையும். 209 மீட்டர் நீளமுள்ள இந்த ரெயிலில் 600 பேர் வரை செல்ல முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த திட்டம் 75 சதவீதம் சீன நிதியுதவியுடன் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலில் ரூ.35 ஆயிரம் கோடி மதிப்பிடப்பட்ட நிலையில் இந்த திட்டத்துக்கான செலவு தற்போது ரூ.60 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. எனினும் முழுவதும் மின் ஆற்றலை பயன்படுத்தி ரெயில் இயக்கப்படுவதால் கார்பன் வெளியேற்றம் பெருமளவில் குறையும் என அந்த நாட்டின் ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.


Next Story