6 வாரங்களில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே


6 வாரங்களில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
x
தினத்தந்தி 25 May 2022 4:00 PM IST (Updated: 25 May 2022 4:04 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூடுதல் பொறுப்பாக நிதித்துறை மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார்

கொழும்பு,

இலங்கை, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அங்கு பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் இலங்கை அரசு திணறுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. இலங்கையில் பல பொருட்களுக்கு தட்டுப்பாடும் நிலவியதால், மக்கள் வெகுண்டெழுந்தனர். ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. போராட்டத்துக்கு அடி பணிந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினர்.

இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க கடந்த மே 12-ஆம் தேதி பதவியேற்றாா். அதன்பின், பல்வேறு துறைகளுக்கு மந்திரிகளை அதிபா் கோத்தபய ராஜபக்சே நியமித்து வருகிறாா். கடந்த மே 14-ஆம் தேதி 4 மந்திரிகளும், கடந்த மே 20-ஆம் தேதி 9 மந்திரிகளும் பதவியேற்றனா். இதன் தொடா்ச்சியாக கடந்த திங்கள்கிழமை 8 அமைச்சா்களும் பதவியேற்றுக் கொண்டனா்.

இருப்பினும் நிதி மந்திரி பதவியை யாருக்கும் வழங்கவில்லை. இந்நிலையில், இன்று அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூடுதல் பொறுப்பாக நிதித்துறை மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார். அதிபர் கோத்பய ராஜபக்சே முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். நிதித்துறை பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்கே, இலங்கையில் அடுத்த ஆறு வாரத்திற்குள் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றார். மேலும், உள்கட்டமைப்பு திட்டங்களை குறைத்து, இரண்டு ஆண்டு நிவாரண திட்டங்களுக்கு நிதி திருப்பி விடப்படும்" என்றார்.

1 More update

Next Story