"நெருக்கடி நிலையை பயன்படுத்தி லாபம் ஈட்டுவது ஒழுக்கக்கேடானது" - எரிசக்தி நிறுவனங்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம்


நெருக்கடி நிலையை பயன்படுத்தி லாபம் ஈட்டுவது ஒழுக்கக்கேடானது - எரிசக்தி நிறுவனங்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம்
x

அனைத்து நாடுகளும் எரிசக்தி நிறுவனங்களின் அதிகப்படியான லாபங்களுக்கு வரி விதிக்க வேண்டும் என்று அண்டேனியோ குட்டாரெஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா,

உக்ரைன்-ரஷியா இடையிலான போர் காரணமாக ரஷியா மீது சர்வதேச நாடுகள் வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அதே சமயம் எரிசக்தி தேவைக்காக ரஷியாவை சார்ந்திருப்பதை குறைக்க முடிவு செய்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பல்வேறு நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தற்போது நிலவி வரும் நெருக்கடி நிலையை பயன்படுத்தி எரிசக்தி நிறுவனங்கள் லாபம் ஈட்டுவது ஒழுக்கக்கேடானது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டாரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு இடையில் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் லாபத்தில் வாரி விதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மிகப்பெரிய எரிசக்தி நிறுவனங்களின் கூட்டு லாபம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 100 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. அனைத்து நாடுகளும் இந்த அதிகப்படியான லாபங்களுக்கு வரி விதிக்க வேண்டும் என்று அண்டேனியோ குட்டாரெஸ் தெரிவித்துள்ளார்.

இந்த வரி விதிப்பு தொகையை தற்போதைய கடினமான காலங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அனைத்து நாடுகளும், குறிப்பாக வளர்ந்த நாடுகள் தங்கள் ஆற்றல் தேவையை நிர்வகிக்க வேண்டும், மறுசுழற்சி பொருட்களுக்கான தேவையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story