"பெட்ரோலுக்காக நள்ளிரவு 12 மணி வரை காத்திருந்தும் பயனில்லை": கொந்தளிக்கும் இலங்கை மக்கள்


பெட்ரோலுக்காக நள்ளிரவு 12 மணி வரை காத்திருந்தும் பயனில்லை: கொந்தளிக்கும் இலங்கை மக்கள்
x

எரிபொருள் நிரப்புவதற்காக நள்ளிரவு 12 மணி வரை வாகன ஓட்டிகள் காத்திருந்தும், எரிபொருள் நிரப்பப்படாத நிலை உள்ளது.

கொழும்பு,

இலங்கை, முள்ளிப்பொத்தானை பெட்ரோல் பங்கில் முறையாக பெட்ரோல் விநியோகம் செய்யப்படவில்லை என வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

எரிபொருள் நிரப்புவதற்காக நள்ளிரவு 12 மணி வரை வாகன ஓட்டிகள் காத்திருந்தும், எரிபொருள் நிரப்பப்படாததால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த தம்பலகாமம் போலீசார் வாடிக்கையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.


Next Story