காலனித்துவ பழக்கங்களை மேற்கத்திய நாடுகள் கைவிடாதது துரதிர்ஷ்டம்: ரஷியா குற்றச்சாட்டு


காலனித்துவ பழக்கங்களை மேற்கத்திய நாடுகள் கைவிடாதது துரதிர்ஷ்டம்:  ரஷியா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 2 March 2023 12:27 PM GMT (Updated: 2 March 2023 1:28 PM GMT)

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் பொறுப்புணர்வுடன் கூடிய நிலைப்பாட்டை இந்தியா எடுக்கிறது என லாவ்ரவ் பாராட்டு தெரிவித்து உள்ளார்.


புதுடெல்லி,


இந்தியாவின் தலைமையின் கீழான ஜி-20 மாநாட்டையொட்டி, புதுடெல்லியில் அனைத்து ஜி-20 நாடுகளை சேர்ந்த வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.

கூட்டத்தில் பங்கேற்க ஜி-20 உறுப்பினர் அல்லாத நாடுகள் உள்பட 40 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டு உள்ளனர். பலதரப்பு அமைப்புகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றன.

இதில், ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவ், அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன், இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி மற்றும் சீன வெளியுறவு மந்திரி குவின் கேங் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

சமீபத்தில் ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான மோதல் ஏற்பட்டு, கடந்த பிப்ரவரி 24-ந்தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்து உள்ளது. கடந்த 8-ந்தேதி, ரஷிய ராணுவம் மற்றும் கிரெம்ளின் மாளிகைக்கு எதிராக புதிய தடைகளை இங்கிலாந்து அறிவித்தது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், டெல்லியில் ரஷிய வெளியுறவு மந்திரி லாவ்ரவ் பேசும்போது, இந்த மேற்கத்திய நாடுகளை நாம் கவனித்தோம் என்றால், அவர்கள் இன்னும் நாடுகளை கைப்பற்றி, மக்களை சுரண்டி வருகிறது. மேற்கத்திய நாடுகள் தனது புதிய காலனித்துவ பழக்கங்களை இன்னும் விட்டொழிக்காதது துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது.

சர்வதேச சமூகத்தின் நலன்களை கவனத்தில் கொள்ளாமல், தங்களது விருப்பங்களை இன்னும் அவர்கள் ஊக்குவித்து கொண்டிருக்கின்றனர்.

அவர்களில், நெருக்கடியின் கீழ் இருக்கும் சில நாடுகள் ஏதோ சில விசயங்களை கூறுகின்றனர். அல்லது, அமெரிக்க அழுத்தத்தில் இருந்து தங்களை விடுவித்து கொள்வதற்காக ஒரு குறிப்பிட்ட வகையில், வாக்களிக்கின்றனர்.

ஆனால், வளர்ந்து வரும் எந்தவொரு நாடும், ஏறக்குறைய ஒருவரும் ரஷியாவுக்கு விதித்த தடைகளை ஏற்று கொள்ளவில்லை. ஏனெனில், மேற்கத்திய நாடுகள் என்ன விளையாட்டு விளையாடி கொண்டிருக்கின்றன என்பது அவர்களுக்கு தெரியும் என கூறியுள்ளார்.

இந்தியாவுடனான ரஷியாவின் உறவானது உரிமை சார்ந்த செயல்திட்டங்களுடன் கூடிய நட்புறவாக விவரிக்கப்படுகிறது. இது, அந்த உறவின் சிறப்பு பண்புநலன்களை பிரதிபலிக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச விவகாரங்களில் பொறுப்புணர்வுடன் இந்தியா எடுக்கும் நிலைப்பாட்டை நாங்கள் பாராட்டுகிறோம் என்றும் லாவ்ரவ் கூறியுள்ளார்.


Next Story