மலேசிய பிரதமராக அன்வர் இப்ராகிம் அறிவிப்பு


மலேசிய பிரதமராக அன்வர் இப்ராகிம் அறிவிப்பு
x

மலேசியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராகிமை அறிவித்தார் மன்னர் அல்-சுல் தான்.

மலேசியா,

மலேசிய எதிர்க்கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிம் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை மன்னர் மாளிகை வெளியிட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு அவர் பிரதமராக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராகிமை மன்னர் அல்-சுல்தான் அப்துல்லா அறிவித்தார்.

மலேசியா நாடாளுமன்ற தேர்தல் முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


Next Story