12 ஆயிரம் பெப்சி கேன்களை சேகரித்து கின்னஸ் உலக சாதனை படைத்த மனிதர்..!!

Image Courtesy : guinnessworldrecords.com
இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் 12,042 பெப்சி கேன்களை சேகரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ரோம்,
இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் உலகின் அதிக அளவிலான பெப்சி கேன்களை சேகரித்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கிறிஸ்டியன் காவலெட்டி என்ற அந்த நபர் உலகில் உள்ள ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் 12,042 பெப்சி கேன்களை சேகரித்துள்ளார்.
52 வயதாகும் கிறிஸ்டியன் செயற்கை ஆர்கானிக் வேதியியலில் பட்டம் பெற்றவர். அவர் இத்தாலியில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் தள மேலாளராக பணிபுரிகிறார். இவர் பல வருடங்களாக பொழுதுபோக்கிற்காக பெப்சி கேன்களை சேகரித்து வந்து உள்ளார். முதல் முறையாக 1989 ஆம் ஆண்டு அவர் இந்த கேன்களை சேகரிக்கும் பணியை துவங்கியுள்ளார்.
அவர் ஏற்கனவே மார்ச் 2004 இல் 4,391 பெப்சி கேன்களை சேகரித்ததன் மூலம் முதல் முறையாக சாதனை படைத்தார். தற்போது அந்த எண்ணிக்கை 12,042-யை எட்டியுள்ளது. இவரின் இந்த சாதனையை தற்போது கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்துள்ளது.






