''இந்திய மீனவர்களால் கடல் வளங்கள் அழிகின்றன'' - இலங்கை மந்திரி பரபரப்பு கருத்து


இந்திய மீனவர்களால் கடல் வளங்கள் அழிகின்றன - இலங்கை மந்திரி பரபரப்பு கருத்து
x

இலங்கை அதிபரின் அடுத்த டெல்லி பயணம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வழி ஏற்படும் என நம்புவதாக குறிப்பிட்டார்.

கொழும்பு,

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கைப் பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருவதால் கடல் வளங்கள் அழிவடைவதாக இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

'ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு' என்ற பொருளில் அதிபர் ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறினார். இலங்கை அதிபரின் அடுத்த டெல்லி பயணம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வழி ஏற்படும் என நம்புவதாக குறிப்பிட்டார்.


Next Story