92 வயதில் 5-வது திருமணத்திற்கு தயாராகும் தொழிலதிபர்


92 வயதில் 5-வது திருமணத்திற்கு தயாராகும் தொழிலதிபர்
x
தினத்தந்தி 21 March 2023 1:40 PM IST (Updated: 21 March 2023 1:58 PM IST)
t-max-icont-min-icon

முர்டோக்கின் நான்காவது மனைவி முன்னாள் மாடல் அழகி ஜெர்ரி ஹால். கடந்த ஆண்டுதான் முர்டாக் இவரிடமிருந்து பிரிந்தார்.

சிட்னி

உலகப் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக். இவர் தனது 92 வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறார்.

66 வயதான ஆன் லெஸ்லி ஸ்மித் அவரது புதிய வருங்கால மனைவி. ஏற்கெனவே திருமணமாகி கணவரை இழந்தவர். மறைந்த இவரது கணவர் செஸ்டர் ஸ்மித், நாட்டுப்புற பாடகராகவும் மற்றும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகியாகவும் இருந்தவர்.

முர்டோக், லெஸ்ஸி இருவரும் வருகிற கோடை காலத்தில் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்துள்ளனர். நாங்கள் இருவரும் எங்கள் வாழ்க்கையின் இரண்டாம் பாதியை ஒன்றாகக் கழிக்க எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம் என மர்டாக் தெரிவித்துள்ளார்.

மெல்போர்னில் பிறந்த முர்டாக், சுமார் 17 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்குச் சொந்தக்காரர். இவர் தான் திருமணம் செய்துகொள்ள இருக்கும் ஆன் லெஸ்லிக்காக அஸ்ஷர்-கட் வைர மோதிரத்தை வாங்க முடிவு செய்திருக்கிறாராம்.

முர்டாக்கிற்கு முதல் மூன்று திருமணங்களின் மூலம் ஆறு குழந்தைகள் உள்ளனர்.

முர்டோக்கின் நான்காவது மனைவி முன்னாள் மாடல் அழகி ஜெர்ரி ஹால். கடந்த ஆண்டுதான் முர்டாக் இவரிடமிருந்து பிரிந்தார்.

1 More update

Next Story