எர்த்திரியாவில் ஆண்கள் அனைவரும் கட்டாயம் 2 திருமணம் ; இல்லாவிட்டால் சிறை ...! உண்மை தன்மை என்ன


எர்த்திரியாவில் ஆண்கள் அனைவரும் கட்டாயம் 2 திருமணம் ;  இல்லாவிட்டால் சிறை ...! உண்மை தன்மை என்ன
x
தினத்தந்தி 10 Aug 2022 6:52 AM GMT (Updated: 10 Aug 2022 11:09 AM GMT)

எர்த்திரியாவில் ஆண்கள் அனைவரும் கட்டாயம் 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் சிறை இதன் உண்மை தன்மை என்ன என்பதை பார்க்கலாம்

ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் உள்ள ஒவ்வொரு ஆணும் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் சிறைக்கு செல்வார்கள் என்று சமூக ஊடகங்களில் பதிவு வெளியாகி உள்ளது. இதன் உண்மையைச் சரிபார்ப்போம்.

ஆப்பிரிக்க நாட்டில் செங்கடலையொட்டி உள்ளது எரித்திரியா நாடு சிறிய நாடான இங்கு அடிக்கடி உள்நாட்டு போர் நடந்து வருகிறது. மேலும் அண்டை நாடுகளுடனும் போரிட்டு வருகிறது.

தொடர்ந்து அடிக்கடி போர்களை சந்தித்து வருவதால் இந்த நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துவிட்டது. அதே நேரத்தில் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. எனவே பெண்களுக்கு திருமணம் செய்வதற்கு போதிய ஆண்கள் கிடைக்கவில்லை. இதனால் பல பெண்கள் திருமணம் ஆகாமலேயே காலத்தை தள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தடுக்கும் வகையில் எரித்திரியா நாட்டில் புதிய விசித்திர சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி ஆண்கள் அனைவரும் கட்டாயம் 2 திருமணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு ஜெயில் தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2க்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொண்டாலும், அது குற்றமாக கருதப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், கணவரின் முதல் மனைவி இந்த திருமணத்தை எதிர்க்கக் கூடாது அவ்வாறு எதிர்த்தால் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது என சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால் இது உண்மையல்ல

பிபிசியின் அறிக்கையின்படி, இந்த புரளி முதலில் கிரேஸி திங்கட் என்ற கென்ய கிண்டல் கட்டுரையால் வெளியிடப்பட்டது. இந்த கதை பல நாட்களாக சமூக வலைதளங்களில் டிரெண்டானது. இந்தக் கதையைப் பற்றிய மற்ற சில ஊடக அறிக்கைகளை இங்கே படிக்கலாம்.

இதற்கு 2016ல் பதிலளித்த எரித்திரியாவின் தகவல் துறை அமைச்சர் யெமனே ஜி. மெஸ்கெல்

கட்டாய பலதார மணம் குறித்த உத்தரவு உள்ளது என்பது நகைப்புக்குரியது. இட்டுக்கட்டப்பட்ட & அற்பமான கதையை உள்ளது என கூறினார்.

மற்றொரு எரித்திரியா அதிகாரி எரித்ரியா தலைநகர்அஸ்மாராவில் உள்ள ஒரு பைத்தியக்காரன் இந்தக் கதை உண்மையல்ல என்பதை அறிவான் என கூறினார்.

மேலும் எரித்திரியாவின் தண்டனைச் சட்டத்தின்படி, பலதார மணம் சட்டவிரோதமானது. இந்த ஆதாரத்திலிருந்து, இது இப்போது மீண்டும் வெளிவந்துள்ள பழைய புரளி செய்து என்றும், பதிவில் கூறப்பட்டுள்ள கூற்றுகள் தவறானவை என்றும் நாம் முடிவு செய்யலாம்.


Next Story