ஐரோப்பாவில் அடுத்த ஆண்டு இயற்கை எரிவாயு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு - சர்வதேச எரிசக்தி நிறுவனம் எச்சரிக்கை


ஐரோப்பாவில் அடுத்த ஆண்டு இயற்கை எரிவாயு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு - சர்வதேச எரிசக்தி நிறுவனம் எச்சரிக்கை
x

2023-ல் ஐரோப்பாவின் இயற்கை எரிவாயு கையிரிப்பு 65 சதவீதம் மட்டுமே இருக்கும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் கணித்துள்ளது.

பாரிஸ்,

ஐரோப்பாவில் வரும் 2023-ம் ஆண்டு சுமார் 3 ஆயிரம் கோடி கன மீட்டர் அளவிலான இயற்கை எரிவாயு பற்றாக்குறை ஏற்படக்கூடும் என சர்வதேச எரிசக்தி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அபாயத்தை தவிர்க்கும் வகையில் ஐரோப்பிய நாடுகள் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் பல்வேறு நாடுகளின் அரசுகள் அவசர நடவடிக்கைகளை எடுத்து இயற்கை எரிவாயுவின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷியா மீது ஐரோப்பிய நாடுகள் விதித்த பொருளாதார மற்று வர்த்தக தடைகளின் எதிரொலியாக, ஐரோப்பாவிற்கு தேவையான இயற்கை எரிவாயுவை ரஷியா விநியோகிக்கும் வாய்ப்பு குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-ம் ஆண்டில் ஐரோப்பாவின் இயற்கை எரிவாயு கையிரிப்பு 65 சதவீதம் மட்டுமே இருக்கும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் கணித்துள்ளது. 2022-ம் ஆண்டுக்கு முன்பு வரை ஐரோப்பிய ஒன்றியம் பெரும் அளவிலான இயற்கை எரிவாயுவை ரஷியாவிடம் இருந்து இறக்குமதி செய்து வந்த நிலையில், ரஷியா-உக்ரைன் போருக்குப் பின் இது 9 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story