பாலியல் புகார்; நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சேன் குற்றவாளி - காத்மாண்டு கோர்ட்டு அறிவிப்பு


பாலியல் புகார்; நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சேன் குற்றவாளி - காத்மாண்டு கோர்ட்டு அறிவிப்பு
x

நேபாள கிரிக்கெட் வாரியம் சந்தீப் லமிச்சேனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

காத்மாண்டு ,

நேபாள கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் சந்தீப் லமிச்சேன். இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஐ.பி.எல். தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார். கடைசியாக ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்தீப் விளையாடினார்.

இந்த நிலையில் சந்தீப் லமிச்சேன் மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். அந்த புகாரில், கடந்த ஆகஸ்ட் 21-ந்தேதி காத்மாண்டு ஓட்டல் ஒன்றில் சந்தீப் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியிருந்தார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தீப் லமிச்சேன், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இதனிடையே நேபாள கிரிக்கெட் வாரியம் சந்தீப் லமிச்சேனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் சந்தீப்பை குற்றவாளி என காத்மாண்டு கோர்ட்டு அறிவித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story