சீன அதிபர் ஜின்பிங்குடன் நியூசிலாந்து பிரதமர் பேச்சுவார்த்தை


சீன அதிபர் ஜின்பிங்குடன் நியூசிலாந்து பிரதமர் பேச்சுவார்த்தை
x

5 நாட்கள் அரசுமுறை பயணமாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் சீனா சென்றுள்ளார்.

பீஜிங்,

நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் கடந்த ஜனவரியில் பதவி விலகினார். அவருக்கு பின்னர் நாட்டின் பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றார். இந்தநிலையில் 5 நாட்கள் அரசுமுறை பயணமாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் சீனா சென்றுள்ளார்.

அவர் பதவியேற்புக்கு பின்னர் முதன்முறையாக சீனாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவின் முக்கிய ஏற்றுமதி சந்தையாக நியூசிலாந்து உள்ளது. மேலும் இருநாடுகளுக்கு இடையே நல்லுறவு நீடித்து வரும் நிலையில் இந்த பயணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

டியான்ஜினில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் ஹிப்கின்ஸ் பேசினார். வணிக பிரநிதிகள் முன்னிலையில் நாட்டிற்கு தேவையான முதலீடுகளை பெறும் வகையில் ஹிப்கின்சின் பேச்சு அமைந்தது. பின்னர் நியூசிலாந்து பிரதமர் ஹிப்கின்சுடன் சீன அதிபர் ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கொரோனா தொற்று முடிந்தநிலையிலும் நியூசிலாந்தின் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது. அதனை மீட்டெக்கும் முயற்சியில் அவர்களின் பேச்சுவார்த்தை அமைந்தது. மேலும் நாட்டின் சுற்றுலா, கல்வி மற்றும் ஏற்றுமதி துறைகளை உயர்த்தும் நோக்கில் சீனாவின் உதவியை ஹிப்கின்ஸ் கோரினார். சீனா அதிபர் ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தை மிகப்பெரிய முக்கியத்துவத்தை அளிக்கும் என பிரதமர் ஹிப்கின்ஸ் கூறினார்.

1 More update

Next Story