வடகொரியாவில் முதல் முறையாக வெளியுறவு மந்திரியாக பெண் நியமனம்


வடகொரியாவில் முதல் முறையாக வெளியுறவு மந்திரியாக பெண் நியமனம்
x

வடகொரியாவில் முதல் முறையாக பெண் வெளியுறவு மந்திரியாக சோ சோன்-ஹுய் நியமிக்கப்பட்டார்.

பியாங்யாங்,

வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய குழு கூட்டம் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் தலைமையில் நடந்தது.

3 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, நாட்டின் ராணுவ பலத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்டத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம், வடகொரியாவின் புதிய வெளியுறவு மந்திரியாக சோ சோன்-ஹுய் என்கிற பெண் நியமிக்கப்பட்டார். வடகொரியா வரலாற்றில் வெளியுறவு மந்திரியாக பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். மூத்த தூதரக அதிகாரியான சோ சோன்-ஹுய், வடகொரியா-அமெரிக்கா இடையிலான அணுஆயுத பேச்சுவார்த்தையில் கிம்முக்கு நெருக்கமான உதவியாளராக பணியாற்றியவர் ஆவார். மேலும் இவர் துணை வெளியுறவு மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார்.


Next Story