தென்கொரியாவை நோக்கி கிழக்கு கடற்பகுதியில் வடகொரியா இன்று அதிகாலை மீண்டும் ஏவுகணை வீச்சு!


தென்கொரியாவை நோக்கி கிழக்கு கடற்பகுதியில் வடகொரியா இன்று அதிகாலை மீண்டும் ஏவுகணை வீச்சு!
x

வடகொரியாவில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை கிழக்கு கடற்பகுதியில் வான்பரப்பை கடந்து சென்று பசிபிக் கடலில் விழுந்துள்ளது.

சியோல்,

வட கொரியா கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக ஜப்பான் மீது கடந்த செவ்வாய்க்கிழமை ஏவுகணையை ஏவியது.வடகொரியா பரிசோதித்த ஏவுகணை பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பான் எல்லைக்கு மேலே பறந்து சென்றது.

இதை தொடர்ந்து ஜப்பான் அரசு நாட்டுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரித்தது. 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பானுக்கு மேல் பறந்த முதல் வட கொரிய ஏவுகணை இதுவாகும்.

இதற்கு பதிலடியாக அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா இன்று ஏவுகணை சோதனை நடத்தியது. வடகொரியாவுக்கு பதிலடியாக இந்த சோதனையில் அமெரிக்க ராணுவம் தங்களுக்கு சொந்தமான 4 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது. அதேவேளை, தென்கொரிய ராணுவமும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது.

இந்த நிலையில், வடகொரியா இன்று அதிகாலை அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் வல்லமை கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்தது.

வடகொரியாவில் இருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணை ஜப்பான், தென்கொரியாவை நோக்கி கிழக்கு கடற்பகுதியில் வான்பரப்பை கடந்து சென்று பசுபிக் கடலில் விழுந்துள்ளது.இதனை தென்கொரிய கூட்டு ராணுவ படை உறுதி செய்துள்ளது.


Next Story