வடகொரியாவுக்குள் ஊடுருவிய அமெரிக்க ராணுவ வீரர் கைது


வடகொரியாவுக்குள் ஊடுருவிய அமெரிக்க ராணுவ வீரர் கைது
x

Image Courtacy: AFP

வடகொரியாவுக்குள் ஊடுருவிய அமெரிக்க ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

சியோல்,

கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை. இதனால் இருநாடுகளும் அவ்வப்போது உரசல்களில் ஈடுபடுகின்றன. இதில் தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா அரசு செயல்படுகிறது. இதனால் கூட்டுபோர் பயிற்சி, ராணுவ ஒத்திகை போன்றவற்றில் ஈடுபடும் வகையில் அமெரிக்கா ராணுவ வீரர்கள் தென்கொரியாவுக்கு அனுப்பப்படுவர்.

இந்தநிலையில் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் வடகொரியாவுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இருநாடுகளையும் பிரிக்கும் சர்வதேச எல்லைக்கோட்டில் அமைந்துள்ள பன்மூஞ்சம் கிராமம் வழியே இவர் வடகொரியாவுக்கு சென்றுள்ளார். அவரை வடகொரிய ராணுவத்தினர் கைது செய்தனர். ராணுவ வீரரை மீட்பது குறித்து அமெரிக்க ராணுவத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.


Next Story