4,500 ஆண்டுகளுக்கு முன்பே முத்தமிட தொடங்கிய மக்கள்...? அதுவும் அந்த இடத்தில்; புதிய தகவல்


4,500 ஆண்டுகளுக்கு முன்பே முத்தமிட தொடங்கிய மக்கள்...? அதுவும் அந்த இடத்தில்; புதிய தகவல்
x

உலகில் 3,500 ஆண்டுகளுக்கு முன் ஆசியாவில் முதன்முதலாக மனிதர்கள் முத்தமிட்டனர் என்பதே இதுவரை கிடைத்த சான்றுகளில் இருந்து அறியப்பட்டு வந்தது.

கோபன்ஹேகன்,

உலகில் காதலை பரிமாறி கொள்ளும் உணர்வுப்பூர்வ முறைகளில் ஒன்றாக முத்தம் அறியப்படுகிறது. இது காதலர்கள் மட்டுமின்றி, தம்பதிகள், பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு கன்னத்தில் அளிக்கும் முத்தம், வயதில் மூத்தவர்களுக்கு அல்லது மதிப்பு வாய்ந்தவர்களுக்கு அவர்களின் மதிப்பை வெளிப்படுத்த, புறங்கையில் முத்தம் கொடுப்பது உள்ளிட்ட பல முத்தங்களை பற்றி நாம் அறிந்திருப்போம்.

கன்னம், கைகளில் முத்தமிடுதல் தவிர்த்து, மூக்கோடு மூக்கை உரசி அன்பை வெளிப்படுத்துபவர்களும் உலகில் உள்ளனர். காதலர்களுக்கு இடையேயான இந்த முத்தத்தில் சைவம், அசைவம் என்றெல்லாம் கவிஞர்களும் கூட வர்ணித்து உள்ளனர்.

உடலில் அதிக உணர்வுள்ள பகுதியாக உதடு உள்ளது. எனினும், பொதுவாக நாம் உதட்டை மறைக்கும் வகையில் ஆடை அணிவதில்லை. எனினும், அன்பை வெளிப்படுத்தும் பகுதியாகவும் அது உள்ளது. இதனால் உதட்டுடனான முத்தம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

இதுபற்றி கோபன்ஹேகன் பல்கலைக்கழக குழுவினர் கூறும்போது, மெசபடோமிய சமூகத்தினர் இடையே முதலில் இந்த உதட்டுடன் கொடுக்கப்படும், முத்தமிடும் பழக்கம் நடந்திருக்கும் என கூறுகின்றனர். இது பல்வேறு கலாசாரங்களிலும் கூட பரவியிருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

இதனால், ஆசியாவின் சில குறிப்பிட்ட பகுதியில் 3,500 ஆண்டுகளுக்கு முன் மனித முத்தம் பதிவானது என்ற கொள்கைக்கு இது முரண்பாடாக அமைகிறது.

ஆராய்ச்சியாளர்களும், வரலாற்று ஆசிரியர்களும் முத்தம் இரண்டு வகைப்படும் என வேறுபடுத்தி உள்ளனர். அவற்றில் ஒன்று, நட்பு சார்ந்த மற்றும் பெற்றோர் வகையை சார்ந்த முத்தம். மற்றொன்று, காதல் உணர்வுடன் மற்றும் பாலியல் இச்சையுடன் கூடிய முத்தம் என இரு வகைகளாக பிரிக்கின்றனர்.

எனினும், இவற்றில் முதல் வகை காலநேரம், புவியமைப்பு சார்ந்து, மனிதர்களிடையே பரவலாக காணப்படுகிறது. ஆனால், இரண்டாம் வகையிலான காதல் உணர்வுடனான முத்தம் உலகம் முழுவதும் பரவி உள்ளது என்பதற்கான போதிய சான்றுகள் இல்லை என அமெரிக்கன் ஆந்த்ரோபோலஜிஸ்ட் செய்தி இதழில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ஆய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.

ஆரம்ப காலத்தில் இந்த வகை முத்தம், எதிர்பாலினர் எந்தளவுக்கு தமக்கு பொருந்த கூடியவர் என மதிப்பிட ஏதுவான நோக்கம் கொண்டிருந்தது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உதட்டுடனான முத்தத்தில் ரசாயன பரிமாற்றங்கள், தம்பதிகளின் இடையேயான நெருக்கம் சார்ந்த உணர்வுகளை அதிகரித்து, வேறுபாடுகளை களைய செய்வதுடன், பாலியல் உணர்ச்சி உச்சமடைவதற்கும் உதவ கூடும் என ஆய்வு தெரிவிக்கின்றது.

உலகம் முழுவதிலும் உள்ள 168 கலாசாரங்களில் 46% கலாசாரங்களில் மட்டுமே காதல் நோக்கத்துடன் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுகின்றனர் என நிவாடா பல்கலைக்கழக பேராசிரியர் வில்லியம் ஜான்கோவியாக் கூறுகிறார்.

காலப்போக்கில் சில நோய்களை தவிர்ப்பதற்காக முத்தமிடும் பழக்கம் சில சமூக கலாசாரங்களில் மறைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பழங்காலங்களில் அரசர்கள் பலர் மக்கள் முத்தமிட்டு கொள்ள தடை விதித்து இருந்தனர். ஏனெனில், முத்தமிடுவது மக்களுக்கானது அல்ல என்பது அவர்களது எண்ணம். ஆனால், இன்றைய காலத்தில் முத்தமிடுவதற்கு அந்த தடை எதுவும் இல்லை.

மனிதர்கள் மட்டுமின்றி, சிம்பன்சி எனப்படும் குரங்கு இனங்களும் சமூக உறவுகளை பராமரிப்பதற்காக, பாலியல் சார்ந்த உதட்டு முத்தம் கொடுத்து கொள்கின்றன.

மெசபடோமியாவில் மருத்துவ வரலாற்றில் நிபுணத்துவம் வாய்ந்தவரான ஆர்போல் என்பவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், தொன்மையான மனித நாகரிகங்களுக்கு பெயர் பெற்ற பழமையான மெசபடோமியாவில், யூப்ரடீஸ் மற்றும் டைக்ரிஸ் ஆற்றங்கரை பகுதிகளில் (இன்றைய ஈராக் மற்றும் சிரியா நாடுகள்) இந்த முத்த பரிமாற்ற பழக்கம் காணப்பட்டு உள்ளது.

இதற்கான சான்றுகளாக ஆயிரக்கணக்கான கிளே டேப்லெட் எனப்படும் களிமண் சார்ந்த எழுதும் பலகை போன்ற பொருட்கள் கிடைத்து உள்ளன. அவற்றில் இருந்து, முத்தம் இடுவது என்பது பழங்காலங்களில் காதல் உறவின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது.

நட்பு மற்றும் குடும்ப உறவுகளில் காணப்படும் ஒரு பகுதியை போன்றே அதுவும் இருந்துள்ளது என அந்த குறிப்பு தெரிவிக்கின்றது.

அதனால், இது ஓரிடத்தில் இருந்து மட்டுமே தோன்றி, பரவி இருக்கும் என நினைக்க கூடாது என அவரது கூற்று தெரிவிக்கின்றது. அதற்கு பதிலாக, பல பழங்கால கலாசாரங்களில் ஆயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து இருப்பது போல் தோன்றுகிறது என அவர் கூறுகிறார்.


Next Story