பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரப் உடல்நிலை கவலைக்கிடம்


பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரப் உடல்நிலை கவலைக்கிடம்
x
தினத்தந்தி 12 Jun 2022 12:35 PM IST (Updated: 12 Jun 2022 12:36 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரப் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப். இவர் 1999-ல் பாகிஸ்தானில் ராணுவ ஆக்கிரமிப்பு மூலம் பதவிக்கு வந்தார். 78 வயதாகும் முஷாரப் உடல் நிலையை காரணம் துபாய்க்கு சென்று அங்கேயே வசித்து வருகிறார்.

வயது ஓவ்வாமை காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னாள் அதிபர் முஷாரப் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் பாகிஸ்தான் ஊடகங்கள் இதனை மறுத்துள்ளன.

இந்நிலையில், துபாயில் உள்ள அவரது வீட்டில் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அந்நாட்டு முன்னாள் தகவல் தொடர்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story