பிலிப்பைன்ஸ்: சாவோலா புயலால் 3.87 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்


பிலிப்பைன்ஸ்: சாவோலா புயலால் 3.87 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
x

Image Courtesy : AFP

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 3 லட்சத்து 87 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

மணிலா,

வெப்ப மண்டல புயலான சாவோலா சீனாவின் தெற்கு பகுதியில் உருவானது. இந்த புயல் காரணமாக பிலிப்பைன்சில் கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி மத்திய பிலிப்பைன்ஸ் மற்றும் லூசோன் தீவுகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்து ஒருவர் பலியானார்.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 3 லட்சத்து 87 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். புயல் கரையை கடந்தும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் பிலிப்பைன்சை நோக்கி மேலும் ஒரு வெப்ப மண்டல புயல் வருவதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story