ஐரோப்பாவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு - ஹங்கேரி அரசின் எரிசக்தி அமைச்சகம் எச்சரிக்கை


ஐரோப்பாவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு - ஹங்கேரி அரசின் எரிசக்தி அமைச்சகம் எச்சரிக்கை
x

ஐரோப்பாவில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஹங்கேரி அரசின் எரிசக்தி அமைச்சகம் எச்சரித்துள்ளது.

புடாபெஸ்ட்,

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷியாவின் பெட்ரோலிய பொருட்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜி7 நாடுகள் விதித்த உச்சவிலை வரம்பு அண்மையில் நடைமுறைக்கு வந்தது. அதே போல் ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விதித்த தடையும் அமலுக்கு வந்துள்ளது.

இதன் விளைவாக ஐரோப்பாவில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஹங்கேரி அரசின் எரிசக்தி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தோல்வியுற்ற தடைக் கொள்கையின் காரணமாக ஐரோப்பா நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது எனவும், இது ஐரோப்பிய நாடுகள் தொழில் நிறுவனங்கள் மற்றும் பல குடும்பங்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது என்றும் ஹங்கேரி அரசின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ரஷியாவின் மீதான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தடை நடவடிக்கைகளுக்கு சுமார் 97 சதவீத ஹங்கேரிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story