பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் 6.3 ஆக பதிவு


பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் 6.3 ஆக பதிவு
x

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.

போர்ட் மார்ஸ்பி,

தென்மேற்கு பசிபிக்கில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் இன்று மாலை 4.46 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பசிபிக் எரிமலை வளையம் என அழைக்கப்படும் பகுதியில் பப்புவா நியூ கினியா அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story