அரசு முறை பயணமாக இலங்கை அதிபர் இந்தியா வருகிறார்


அரசு முறை பயணமாக இலங்கை அதிபர் இந்தியா வருகிறார்
x

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அரசு முறை பயணமாக வருகிற 21-ந் தேதி இந்தியா வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொழும்பு,

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அரசு முறை பயணமாக வருகிற 21-ந் தேதி இந்தியா வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற மக்கள் எழுச்சியால் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அந்த நாட்டின் அதிபராக நியமிக்கப்பட்ட பின்னர், ரணில் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

2 நாள் பயணமாக இந்தியா வரும் ரணில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ரணிலுடன் இலங்கை மீன்வளத்துறை மந்திரி டக்ளஸ் தேவானந்தா, எரிசக்தித்துறை மந்திரி காஞ்சன விஜேசேகரா, வெளியுறவு மந்திரி அலி சப்ரி ஆகியோர் இந்தியா வருவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணிலின் இந்திய பயணத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக இந்திய வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா அடுத்த வாரம் கொழும்பு வருவார் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரணில், இந்தியா வருவதற்கு முன்னர் இலங்கையில் இந்திய அரசு சார்பில் செயல்படுத்தப்படும் மின்சாரம், எரிசக்தி, விவசாயம் மற்றும் கடலோர பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களை இறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story