ஜி7 உச்சிமாநாட்டில் கவனம் ஈர்த்த பிரதமரின் ஜாக்கெட்


ஜி7 உச்சிமாநாட்டில் கவனம் ஈர்த்த பிரதமரின் ஜாக்கெட்
x

ஜி 7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி எளிமையாக மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் ஆன மேலாடையை அணிந்து வந்தார்.

டோக்கியோ,

ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் ஆன மேலாடையை அணிந்து வந்தார். ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்று வரும் உச்சிமாநாட்டில் பங்கேற்ற அவர், மறுசுழற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பாட்டில்களை மறுசுழற்சி செய்து தயார் செய்யப்பட்ட ஜாக்கெட்டை அணிந்து வந்தார்.

இத்தகைய ஜாக்கெட் ஒன்றைத் தயாரிக்க சுமார் 15 பெட் பாட்டில்கள் தேவைப்படுகிறது. இந்த ஆடைகளுக்கு தண்ணீர் வண்ணம் பயன்படுத்தப்படுவதில்லை. முதலில், நார் தயாரிக்கப்பட்டு, பின்னர் அது துணியாக மாற்றப்பட்டு, இறுதியாக, ஆடை தயாரிக்கப்படுகிறது. இந்த ஜாக்கெட்டின் சந்தை விலை வெறும் 2,000 ரூபாய் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story