உக்ரைன் போர்: ஜோ பைடனின் நிபந்தனையை நிராகரித்தார் புதின் - தாக்குதல் தொடரும் என எச்சரிக்கை


உக்ரைன் போர்: ஜோ பைடனின் நிபந்தனையை நிராகரித்தார் புதின் - தாக்குதல் தொடரும் என எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 Dec 2022 9:44 PM GMT (Updated: 3 Dec 2022 9:45 PM GMT)

உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வர ரஷிய அதிபர் புதினை சந்தித்துபேச தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

மாஸ்கோ,

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தொடர்ந்து வரும் சூழலில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் மேக்ரான் நேற்று முன்தினம் அமெரிக்கா சென்று ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருவரும் போரில் உக்ரைன் வெற்றி பெறுவதற்கு தேவையான உதவிகளை வழங்க உறுதி பூண்டனர்.

அதை தொடர்ந்து பேசிய ஜோ பைடன் உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வர ரஷிய அதிபர் புதினை சந்தித்துபேச தயாராக இருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கான ஜோ பைடனின் நிபந்தனையை புதின் நிரகாரித்தார். மேலும் உக்ரைன் மீதான போர் தவிர்க்க முடியாதது என்றும் தாக்குதல் தொடரும் என்றும் அவர் எச்சரித்தார்.

அதோடு மேற்கத்திய நாடுகளின் அழிவுகரமான கொள்கைகளே போருக்கு வித்திட்டதாகவும், ரஷியாவின் தாக்குதல்கள் உக்ரைனில் இருந்து வந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கான பதில் என்றும் அவர் சாடினார்.


Next Story