500 விமானங்களை வாங்க இன்டிகோ-ஏர்பஸ் ஒப்பந்தம் - பிரதமர் ரிஷி சுனக் பாராட்டு


500 விமானங்களை வாங்க இன்டிகோ-ஏர்பஸ் ஒப்பந்தம் - பிரதமர் ரிஷி சுனக் பாராட்டு
x

கோப்புப்படம்

இண்டிகோவுடனான ஏர்பஸ் ஒப்பந்தம் எங்கள் விமானத்துறைக்கான மிகப்பெரிய வெற்றி என்று பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்தார்.

லண்டன்,

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான இன்டிகோ, இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 500 'ஏ320' ரக விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. இது வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்டிகோ-ஏர்பஸ் இடையிலான இந்த ஒப்பந்தம் இங்கிலாந்தின் விமானத்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இண்டிகோவுடனான ஏர்பஸ் ஒப்பந்தம் எங்கள் விமானத்துறைக்கான மிகப்பெரிய வெற்றி. இது நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு பொருளாதாரத்தை வளர்க்க உதவுகிறது" என கூறினார்.


Next Story