உக்ரைனின் முக்கிய துறைமுகம் மீது ரஷியா தாக்குதல்; 40 ஆயிரம் டன் தானியங்கள் சேதம்


உக்ரைனின் முக்கிய துறைமுகம் மீது ரஷியா தாக்குதல்; 40 ஆயிரம் டன் தானியங்கள் சேதம்
x

Reuters

தினத்தந்தி 3 Aug 2023 7:21 AM GMT (Updated: 3 Aug 2023 8:28 AM GMT)

ரஷியாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைனின் போர்க்குற்ற அலுவலகம் தெரிவித்துள்ளது.

கீவ்,

ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை 2022, பிப்ரவரி மாதம் ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவை தீவிரமாக எதிர்த்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டு பல அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர்

ரஷிய-உக்ரைன் போர் தற்போது 525 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில், உக்ரைன்-ருமேனியா எல்லை வழியாக ஓடும் டானுபே ஆற்றின் அருகே உள்ள இஸ்மாயில் துறைமுகத்தை ரஷியா டிரோன்கள் மூலம் தாக்கியது.

இத்தாக்குதல்களால் 40 ஆயிரம் டன் தானியங்கள் சேதமாகியிருக்கின்றன. டானுபே துறைமுகத்தின் கட்டமைப்பு பெருமளவில் சேதமடைந்திருக்கிறது. உக்ரைனின் தானிய ஏற்றுமதிக்கு ஈடாக வேறு ஒரு நாடு ஏற்றுமதி செய்ய முடியாது" என்று இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் துணை பிரதமர் ஒலெக்ஸாண்டர் குப்ரகோவ் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் அதிகாரிகளின் தகவல்படி உக்ரைனில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷிய படையெடுப்பில் இருந்து 499 குழந்தைகள் உள்பட 10,749 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 15,599 பேர் காயமடைந்துள்ளனர்.

உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் விடுவிக்கப்பட்டவுடன், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை "பல மடங்கு அதிகரிக்கும்" என்று அவர்கள் கூறி உள்ளனர்.


Next Story