#லைவ் அப்டேட்ஸ்: ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா


#லைவ் அப்டேட்ஸ்: ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா
x

கோப்புப்படம்

தினத்தந்தி 4 Jun 2022 8:32 PM GMT (Updated: 5 Jun 2022 4:07 PM GMT)

ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் உக்ரைன் விமானத்தை ரஷிய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.


Live Updates

  • 4 Jun 2022 11:03 PM GMT


    கிழக்கு உக்ரைனில் ஸ்வியாடோகிர்ஸ்க் லாவ்ராவில் உள்ள பழமையான மடாலயத்தில் தீப்பற்றி எரிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அங்கு 300 அகதிகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், 60 குழந்தைகள் உள்ளிட்டோர் தங்கி இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

    இங்கு தீப்பற்றி எரிய காரணம், ரஷிய படைகளின் தாக்குதல்தான் என்று உக்ரைன் ராணுவ அதிகாரி யூரி கோசேவெங்கோ ‘பேஸ்புக்’ பதிவில் தெரிவித்துள்ளார். எரியும் மடாலயத்தின் படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

  • 4 Jun 2022 10:10 PM GMT


    கருங்கடல் துறைமுக நகரமான ஒடெசா அருகே உக்ரைன் ராணுவ விமானம் ஒன்றை ரஷிய படைகள் சுட்டு வீழ்த்தின. இந்த விமானத்தை ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் சுட்டு வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதே போன்று சுமி பிராந்தியத்தில் பீரங்கி பயிற்சி மையத்தை ஏவுகணை தாக்குதல் நடத்தி ரஷிய படைகள் அழித்துள்ளன.

  • 4 Jun 2022 8:33 PM GMT


    நேட்டோ பாதுகாப்பு கூட்டணியில் சேர்ந்து பாதுகாப்பு தேடும் உக்ரைனின் முயற்சிக்கு எதிராக ரஷியா அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தப் போர் 100 நாட்களைத்தாண்டி தொடர்கிறது.

    இந்தப் போரில், அந்த நாட்டின் 20 சதவீத பகுதிகளை ரஷியா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

    கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. டான்பாஸ் பகுதியில் வான்தாக்குதல்களை ரஷிய படையினர் அதிகரித்து வருவதாக இங்கிலாந்து ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.


Next Story