ரஷிய ராணுவ தளத்தில் பயங்கரவாத தாக்குதல் - 11 பேர் பலி; 15 பேர் காயம்


ரஷிய ராணுவ தளத்தில் பயங்கரவாத தாக்குதல் - 11 பேர் பலி; 15 பேர் காயம்
x

உக்ரைன் அருகே ரஷிய ராணுவ தளத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

மாஸ்கோ,

உக்ரைனுக்கு அருகிலுள்ள ரஷிய ராணுவ தளத்தில் சோவியத் ரரஷிய ஆதரவாளர்கள் 2 பேர் பயிற்சியின் போது மற்ற வீரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் 15 பேர் காயமடைந்தனர். உக்ரைன் எல்லையை ஒட்டிய தென்மேற்கு ரஷியாவின் பெல்கோரோட் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், சோவியத் தன்னார்வல வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

உக்ரைன் போரில் பங்கேற்க 3 லட்சம் ரஷியர்களை அணி திரட்டுமாறு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த பயங்கரவாத தாகுதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.


Next Story