உக்ரைன் போருக்கு பின் ரஷிய அதிபர் புதினை கொலை செய்ய முயற்சி! - உளவுத்துறை அதிகாரி பரபரப்பு தகவல்


உக்ரைன் போருக்கு பின் ரஷிய அதிபர் புதினை கொலை செய்ய முயற்சி! - உளவுத்துறை அதிகாரி பரபரப்பு தகவல்
x

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் அவர் தப்பிவிட்டார் என்ற அதிர்ச்சி தகவலை உக்ரைன் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

கீவ்,

உக்ரைன் மீதான போர் இன்று நான்காவது மாதத்தில் நுழைகிறது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட போர் 3 மாதத்தை கடந்து நடைபெற்று வருகிறது. உலக நாடுகளின் அழுத்தம் மற்றும் பொருளாதார தடைகள் இருந்தபோதிலும், போர் நடவடிக்கைகளிலிருந்து ரஷிய அதிபர் புதின் எந்த நேரத்திலும் பின்வாங்கும் அறிகுறி இல்லை.

இந்த நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் அவர் தப்பிவிட்டார் என்ற அதிர்ச்சி தகவலை உக்ரைன் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உக்ரைனின் பாதுகாப்பு உளவுத்துறையின் தலைவரான மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ், உக்ரைன்ஸ்கா பிராவ்தா தொலைக்காட்சியில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-


"பிப்ரவரியில் ரஷ்யா படையெடுப்பிற்குப் பிறகு புதினை படுகொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள காகசஸ் பிராந்தியத்தின் பிரதிநிதிகளால் ரஷ்ய அதிபர் தாக்கப்பட்டார்.ஆனால், இந்த கொலை முயற்சியில் இருந்து புதின் தப்பிவிட்டார். இது உண்மையில் நடந்த சம்பவம்'' என்று தெரிவித்தார்.


இருப்பினும் இதுபற்றி இன்னும் ரஷ்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை. எனினும், இதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மேஜர் புடானோவ் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story