நிலவில் மோதியது ரஷியாவின் லூனா -25 விண்கலம்


நிலவில் மோதியது ரஷியாவின் லூனா -25 விண்கலம்
x
தினத்தந்தி 20 Aug 2023 9:17 AM GMT (Updated: 20 Aug 2023 10:24 AM GMT)

நிலவுக்கு ரஷியா அனுப்பிய லூனா - 25 விண்கலம் நிலவில் மோதியது.

மாஸ்கோ,

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10ம் தேதி ரஷியா விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தை நாளை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க திட்டமிட்டு இருந்தது.

கடந்த 17ம் தேதி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் ரஷிய விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது. தொடர்ந்து படிப்படியாக சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடந்து வந்தன.

ஆனால், திட்டமிட்டபடி நிலவில் இந்த விண்கலத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

திடீரென விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இறுதிக்கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக ரஷிய விண்வெளி நிறுவனம் கூறியது. இந்த நிலையில் நிலவுக்கு ரஷியா அனுப்பிய லூனா -25 விண்கலம் நிலவில் மோதியது. லூனா 25-ன் விண்கலத்துடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த ரஷிய விஞ்ஞானிகள் முயற்சித்த நிலையில் இந்த திட்டம் தோல்வி அடைந்தது. நேற்றைய தினம் லூனா 25-ன் சுற்றுவட்டப்பாதையை குறைக்கும் போது தொடர்பு துண்டிக்கப்பட்டது. நிலவில் மோதியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ரஷிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்.


Next Story