சவாலான சூழலுக்கு தள்ளப்பட்டால் அணு ஆயுதங்களை ரஷியா பயன்படுத்தும்: முன்னாள் ரஷிய அதிபர் எச்சரிக்கை


சவாலான சூழலுக்கு தள்ளப்பட்டால் அணு ஆயுதங்களை  ரஷியா பயன்படுத்தும்: முன்னாள் ரஷிய அதிபர் எச்சரிக்கை
x

உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களை ரஷியா பயன்படுத்தக்கூடும் என்று அதிபர் புதின் எச்சரித்திருந்தார்.

மாஸ்கோ,

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்று எச்சரித்திருந்தார்.

உக்ரைன் மீது ரஷியா நிஜமாகவே அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்று தான் நம்புவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரஷிய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் இதே கருத்தை பேசி வலியுறுத்தியுள்ளார்.

ரஷியாவை கடினமான சவால்களை எதிர்கொள்ள வைத்தால், அணு ஆயுதங்கள் மூலம் தற்காத்துக் கொள்ள ரஷியாவுக்கு உரிமை உண்டு. இது மழுப்பலான விஷயமல்ல என்பதையும் உறுதிபடுத்தி கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

டிமிட்ரி மெத்வதேவ் ரஷிய நாட்டின் அதிபர் பதவியில் 2008-2012 வரை பொறுப்பு வகித்தவர். கடந்த சில மாதங்களில், அவர் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் மற்றும் உக்ரைன் மீது ஆக்ரோஷமான கருத்துக்களை பேசி வருகிறார்.


Next Story