அமெரிக்காவில் கத்தியால் குத்தப்பட்ட சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண்ணில் பார்வை பறிபோன சோகம்..!


அமெரிக்காவில் கத்தியால் குத்தப்பட்ட  சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண்ணில் பார்வை பறிபோன சோகம்..!
x
தினத்தந்தி 24 Oct 2022 4:30 PM IST (Updated: 24 Oct 2022 4:37 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் கத்தியால் குத்தப்பட்ட இந்திய வம்சாவளி எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண்பார்வை மற்றும் ஒரு கை செயலிழந்தது.

நியூயார்க்,

இந்தியாவின் மும்பையில் பிறந்த பிரபல ஆங்கில எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ந்தேதி அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நடந்த இலக்கிய கருத்தரங்கில் பங்கேற்றார்.

அப்போது திடீரென கூட்டத்திலிருந்து பாய்ந்த இளைஞர் ஒருவர் சல்மான் ருஷ்டியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் சல்மானின் கை நரம்பு, கழுத்து, கண், நெஞ்சு, கல்லீரல் ஆகிய உறுப்புகளில் காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சல்மான் ருஷ்டி தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார்.

இந்த நிலையில் அவர் ஒரு கண் பார்வையை இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் அவரது ஒரு கை செயலிழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

சல்மான் ருஷ்டிக்கு அதிக அளவில் காயங்கள் இருந்ததாகவும், அவரது நரம்புகள் வெட்டப்பட்டதால் கண் பார்வை மற்றும் ஒரு கை செயலிழந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story