பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு எதிராக டுவீட் செய்த இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த எம்.பி கைது..!


பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு எதிராக டுவீட் செய்த இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த எம்.பி கைது..!
x

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு எதிராக டுவீட் செய்த இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த எம்.பி கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாமாபாத்,

நாட்டின் உயர்மட்டத்தில் ஊழலை சட்டப்பூர்வமாக்கியதாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா குறித்து டுவீட் செய்த முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த எம்.பி அசம் கான் சுவாதி கைது செய்யப்பட்டார்.

பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் ஹம்சா ஷெஹ்பாஸ் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அசம் கான் டுவிட்டரில், "மிஸ்டர் பாஜ்வா உங்களுக்கும் உங்களுடன் இருக்கும் சிலருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் திட்டம் உண்மையில் வேலை செய்கிறது. அனைத்து குற்றவாளிகளும் நாட்டின் செலவில் விடுவிக்கப்படுகிறார்கள்.

குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதன் மூலம் நீங்கள் ஊழலை சட்டப்பூர்வமாக்கியுள்ளீர்கள். இந்த நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிக்கிறீர்கள்?" என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து அசம் கான் மீது மத்திய புலனாய்வு அமைப்பு (எப்ஐஏ) வழக்கு பதிவு செய்துள்ளது.

எப்ஐஆரில், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் அரசு நிறுவனங்கள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் ராணுவத் தளபதி உட்பட அதன் மூத்த அரசுப் பணியாளர்களுக்கு ​​எதிராக மோசமான உள்நோக்கங்களுடன் அசம் கான் டுவீட் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ராணுவத் தளபதி மற்றும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக மக்கள் மற்றும் இராணுவப் பணியாளர்களின் மனதில் வெறுப்பை உருவாக்கும் முயற்சி என்றும் நீதித்துறை அமைப்பு மீது அவநம்பிக்கையை உருவாக்கும் முயற்சி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அசம் கான் இஸ்லாமாபாத்தில் உள்ள செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த மூத்த சிவில் நீதிபதி ஷபீர் பாட்டி, அசம் கானை விசாரிக்க எப்ஐஏக்கு 2 நாட்கள் அனுமதியளித்து அக்டோபர் 15-ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அசம் கான், நான் சட்டத்தை மீறியதற்காகவோ, அடிப்படை உரிமைகளை மீறியதற்காகவோ கைது செய்யப்படவில்லை. பஜ்வா என்ற ஒரு பெயரை எடுத்தது மீறல் என்று கூறி கைது செய்யப்பட்டுள்ளேன் என்று கூறினார். மேலும் எப்ஐஏ தன்னை சித்திரவதை செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

1 More update

Next Story