செனகல் : மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து - 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

கோப்புப்படம்
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
திவாவோன்,
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று செனகல். இந்த நாட்டில் மேற்கு பகுதியில் திவாவோன் நகர் உள்ளது . அங்குள்ள ஒரு மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த நாட்டின் அதிபர் மேக்கி சால் கூறும்போது "பொது மருத்துவமனையின் பிறந்த குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 புதிதாகப் பிறந்த குழந்தைகள் இறந்ததை நான் வேதனையுடன் அறிந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அங்கு பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story






