மகுடம் சூடினார் பழங்குடியினர்களின் புதிய மன்னர்...! சந்தோஷத்தில் திளைத்த மக்கள்


மகுடம் சூடினார் பழங்குடியினர்களின் புதிய மன்னர்...! சந்தோஷத்தில் திளைத்த மக்கள்
x

தென் ஆப்பிரிக்காவில் பழங்குடியினர்களின் புதிய அரசருக்கு முடி சூட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

தென் ஆப்பிரிக்கா,

தென் ஆப்பிரிக்காவில் ங்குனி (Nguni) மொழி பேசும் பழங்குடியினர்களின் புதிய அரசருக்கு முடி சூட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த பாரம்பரிய விழாவில் ஆயிரக்கணக்கான ஜுலு போர் வீரர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

48 வயதான "மிசுசுலு கா ஸ்வெலிதினி" ஜுலு ராஜ்ஜியத்தின் அரசராக முடிசூட்டப்பட்டார். வழக்கப்படி ஏராளமான விலங்குகள் பலியிடப்பட்டு விழா கோலாகலமாகத் துவங்கப்பட்டது. 1879 இசண்டல்வானா போரின் போது பிரிட்டிஷ் படைகளையே விரட்டியடித்த பெருமை இந்த ஜுலு ராச்சியத்திற்கு உண்டு. தங்கள் புது மன்னரை வரவேற்கும் விதமாக மக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

முன்னதாக அதிகாலையில் இருந்து, ஆண்களும் பெண்களும் வண்ணமயமான பாரம்பரிய ஆடைகளை அணிந்து ஜூலுவின் மையப்பகுதியான குவாசுலு-நடாலின் தென்கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான நோங்கோமாவின் மலைகளில் உள்ள பளிங்கு அரண்மனைக்கு வெளியே ஒன்றுகூடத் தொடங்கினர்.

புதிய ஜூலு மன்னராக முடிசூடிய மிசுசுலு ஜூலுவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் முன்னர், புதிதாக பதவியேற்ற ராஜா ஒரு ஈட்டியையும், கேடயத்தையும் பிடித்துக்கொண்டு கருப்பு இறகுகளால் ஆன ஆடை அணிந்து கூட்டத்தின் முன் தோன்றினார்.

புதிய மன்னர் பாரம்பரிய சிறுத்தையின் தோலையும், விலங்குகளின் நகங்களால் ஆன நெக்லஸையும் அணிந்து அரியணையில் இருந்து நலம் விரும்பிகளிடம் பேசிய அவர், "இன்று ஜூலு தேசம் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது. ஜூலு தேசத்தை ஒன்றிணைக்க பாடுபடுவேன் என்று நான் உறுதியளிக்கிறேன்," என்று கூறினார்.


Next Story