54 செயற்கைக்கோள்களுடன் 'பால்கன்-9' ராக்கெட் விண்ணில் பாய்ந்தது; 'ஸ்பேஸ்எக்ஸ்' அசத்தல்


54 செயற்கைக்கோள்களுடன் பால்கன்-9 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது; ஸ்பேஸ்எக்ஸ் அசத்தல்
x

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் 54 ஸ்டார்லிங் இணையதள செயற்கைக்கோள்களுடன் பால்கன்-9 ராக்கெட் வானில் சீறிப்பாய்ந்தது.

'பால்கன்-9' ராக்கெட், கேப் கேனவரல் விண்வெளி ஏவுதள வளாகம் 40-ல் இருந்து நேற்று முன்தினம் காலை 10.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

இந்த சாதனையை செய்து அசத்தி இருப்பது, பெரும் பணக்காரரான எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிறுவனம் ஆகும். தற்போது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 3,500-க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள், நம்பகமற்ற, அணுகல் சாத்தியப்படாத இடங்களுக்கும்கூட அதிவேக இணையதளச்சேவையை வழங்கும் என்று ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கூறுகிறது.


Next Story