புகழ்பெற்ற மெக்சிகோ கடற்படை நாய் ஃப்ரிடாவுக்கு முழு உருவ சிலை திறப்பு


புகழ்பெற்ற மெக்சிகோ கடற்படை நாய் ஃப்ரிடாவுக்கு முழு உருவ சிலை திறப்பு
x

மெக்சிகோ கடற்படையைச் சேர்ந்த ஃப்ரிடாம, இடிபாடுகளில் சிக்கிய 12 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது.

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிய நபர்களை கண்டுபிடிக்க 'ஃப்ரிடா' என்ற நாய் பெரிதும் உதவியது. மெக்சிகோ கடற்படையைச் சேர்ந்த இந்த நாய், இடிபாடுகளில் சிக்கிய 12 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது.

கால்களில் பூட்ஸ் அணிந்து கொண்டு மீட்பு பணிகளில் ஈடுபட்ட ஃப்ரிடாவுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. தற்போது ஃப்ரிடா ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அதனை பெருமைப்படுத்தும் விதமாக மெக்சிகோவில் அதன் முழு உருவ சிலை திறக்கப்பட்டுள்ளது.


Next Story