பெண்ணை கொலை செய்த செம்மறி ஆட்டுக்கு வினோத தண்டனை: கோர்ட்டில் விசித்திரமான தீர்ப்பு..!


பெண்ணை கொலை செய்த செம்மறி ஆட்டுக்கு வினோத தண்டனை: கோர்ட்டில் விசித்திரமான தீர்ப்பு..!
x

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆட்டுக்கு கோர்ட்டால் வினோத தண்டனை அளிக்கப்பட்ட சம்பவம் தெற்கு சூடானில் அரங்கேறியுள்ளது.

தெற்கு சூடான்,

தெற்கு சூடான் நாட்டில் ஆக்ரோஷத்துடன் திரிந்த செம்மறி ஆடு ஒன்று ஜாக்குலின் என்ற 45 வயது பெண்ணை திரும்ப திரும்ப முட்டியுள்ளது. இதில் நெஞ்சி எலும்பு முறிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பெண்ணின் உயிரிழப்பிற்கு காரணமான அந்த ஆட்டை தற்போது கம்பி எண்ண வைத்துவிட்டனர் தெற்கு சூடான் காவல் துறையினர். கொலை வழக்கில் செம்மறி ஆட்டிற்கு தெற்கு சூடான் நீதிமன்றத்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வாயில்லா ஜீவனாக இருந்தாலும், தப்பு தப்புதான் என்பது அவர்கள் முன்வைக்கும் வாதம்.

பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட விலங்கின் உரிமையாளர் மீது தான் வழக்கு தொடுக்கப்படுவது வழக்கம். ஆனால் இங்கோ, உரிமையாளர் நிரபராதி என்றும், இந்த ஆடுதான் கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். தற்போது இந்த ஆடு ராணுவ முகாமில் அடைக்கப்பட்டுள்ளது.

ஆட்டின் உரிமையாளருக்கு தண்டனை கிடையாதா என்றால், ஆட்டை பிரிவது தான் உரிமையாளருக்கு தண்டனை என்று கூறிய கோர்ட்டு, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஐந்து பசுமாடுகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

எத்தனையோ வழக்குகளை பார்த்திருக்கிறோம்.. ஆனால் ஆட்டிற்கு சிறைதண்டனை விதிக்கப்படும் நிகழ்வை இப்போதுதான் கேட்கிறோம் என்று நெட்டிசன்கள் நம்பமுடியாமல் இந்த செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.


Next Story