பிரமிக்க வைத்த சனி கிரகம் - நாசா பகிர்ந்த அதிசய புகைப்படம்


பிரமிக்க வைத்த சனி கிரகம் - நாசா பகிர்ந்த அதிசய புகைப்படம்
x
தினத்தந்தி 11 Dec 2022 11:00 AM GMT (Updated: 11 Dec 2022 1:23 PM GMT)

சனி கிரகத்தின் பழைய புகைப்படத்தைப் நாசா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, அவ்வபோது தனது சமூக வலைதள பக்கத்தில் விண்வெளியில் எடுக்கப்பட படங்கள் மற்றும் அரிய வீடியோக்களை பகிர்ந்து வருகிறது.

வின்கலத்தின் மூலமாகவோ அல்லது தொலைநோக்கிகளின் மூலமாகவோ எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் இருக்கும்.

இந்த நிலையில் நாசா, சனி கிரகத்தின் அரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளது, சூரியன் பின்னாலிருந்து ஒளி வீச, சனிக்கிரகத்தின் நிழலில் இருந்து கடந்த 2012 ஆம் ஆண்டில், காசினி விண்கலத்தால் எடுக்கப்பட்ட இந்த அற்புதமான புகைப்படத்தை இணையவாசிகள் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story