டெலிகிராம் செயலியில் இனி கட்டணம் வசூலிக்கப்படும் - வெளியான அதிரடி அறிவிப்பு..!!


டெலிகிராம் செயலியில் இனி கட்டணம் வசூலிக்கப்படும் - வெளியான அதிரடி அறிவிப்பு..!!
x

Image Courtesy : AFP 

டெலிகிராம் அப்டேட் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துபாய்,

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் சமூக வலைத்தளமான டெலிகிராம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பயனர்களின் வசதிக்காக டெலிகிராமில் அவ்வப்போது பல புதிய அப்டேட்கள் வெளியாவது வழக்கம்.

இந்த நிலையில் தற்போது டெலிகிராம் அப்டேட் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது டெலிகிராம் செயலியில் புதிய பிரீமியம் பிளான் ஒன்றை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார்.

பிரீமியம் பிளான் போன்ற பிரத்யேக வசதிகளை பயனர்கள் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் தற்போது டெலிகிராம்-மை பயன்படுத்தி வருபவர்களுக்கு எந்த கட்டணமும் இல்லாத பழைய நடைமுறையே தொடரும் என பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார். இந்த புதிய பிரீமியம் பிளான் இந்த மாதம் அறிமுகவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story