பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு கோவிலில் அடைக்கலம் கொடுத்த இந்துக்கள்


பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  முஸ்லிம்களுக்கு கோவிலில் அடைக்கலம் கொடுத்த இந்துக்கள்
x

பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது.

குவெட்டா,

பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த நாட்டின் பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.

இந்த நிலையில் அங்குள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் ஜலால்கான் என்கிற கிராமத்தில் வெள்ளத்தால் வீடுகளை இழந்து தவிக்கும் முஸ்லிம் மக்களுக்கு இந்துக்கள் கோவிலில் அடைக்கலம் கொடுத்து உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் உடனடியாக கோவிலுக்கு வரும்படி ஒலிபெருக்கியின் மூலம் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருவதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

அதோடு கோவிலில் தஞ்சம் புகுந்துள்ளவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கி வருவதோடு, முஸ்லிம்கள் வளர்த்து வரும் கால்நடைகளையும் கோவில் வளாகத்தில் கட்டி வைத்து பரிமாரிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 More update

Next Story